20 மாடி ஆழமான நீச்சல் குளம்... பிரமிப்பு வீடியோ!

 
துபாய்

துபாயில் அமைந்துள்ள ‘டீப் டைவ் துபாய்’ உலகிலேயே மிக ஆழமான நீச்சல் குளமாக கின்னஸ் சாதனை படைத்துள்ளது. சுமார் 60 மீட்டர் ஆழம் கொண்ட இந்த குளம், 20 மாடி கட்டிட உயரத்திற்கு இணையாக உள்ளது. இதில் 14 மில்லியன் லிட்டர் நன்னீர் நிரப்பப்பட்டுள்ளது.

சிப்பி வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த குளம், ஐக்கிய அரபு அமீரகத்தின் முத்து குளிக்கும் பாரம்பரியத்தை நினைவூட்டுகிறது. நாசா உருவாக்கிய நவீன வடிகட்டுதல் தொழில்நுட்பம் மூலம், இந்த நீர் ஒவ்வொரு 6 மணி நேரத்துக்கும் ஒருமுறை சுத்தம் செய்யப்படுகிறது.

இந்த குளத்தின் உள்ளே ஒரு முழு ‘மூழ்கிய நகரம்’ போல அமைக்கப்பட்டுள்ளது. கைவிடப்பட்ட வீடுகள், பழைய கார்கள், நூலகம், ஆர்கேட் கேம்கள் என அனைத்தும் காண முடிகிறது. நீருக்கடியில் படப்பிடிப்பு நடக்கும் உலகின் மிகப்பெரிய தளமாகவும் இது திகழ்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!