200 மாட்டுவண்டிகளில் சீர்வரிசை… காதணி விழாவில் ஆச்சரியம்!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொங்கபட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் செந்தில்குமார்–மாலியபுரம் தம்பதியின் 2 குழந்தைகளுக்கு காதணி விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு மாலியபுரத்தின் சகோதரர் வேல்முருகன், 200-க்கும் மேற்பட்ட சீர்வரிசை பொருட்களை 20 மாட்டுவண்டிகளில் கொண்டு வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இ.காமாட்சிபுரத்திலிருந்து இ.கொங்கப்பட்டி கிராமம் வரை பாரம்பரிய முறையில் சீர்வரிசை கொண்டு வரப்பட்டது.
சீர்வரிசையாக பித்தளை பானை, அண்டா, பித்தளை குடங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் இரட்டை எண்ணிக்கையில் வழங்கப்பட்டன. மேலும் உப்பு, மிளகாய், மஞ்சள், இரட்டை மாலை, இனிப்பு மற்றும் கார வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பாரம்பரியம் மாறாமல் கொண்டு வரப்பட்டன. தனது அக்காள் குழந்தைகளுக்காக வேல்முருகன் இந்த ஏற்பாட்டை செய்தது கிராம மக்களிடையே பேசுபொருளாக அமைந்தது.
விழாவில் தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தாரை தப்பட்டை மற்றும் வாணவேடிக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. மேலும் ஆட்டுக்கிடாய் மற்றும் வெள்ளி பாத்திரங்களும் சீர்வரிசையில் இடம்பெற்றதால் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதனை கண்ட கிராம மக்கள் பெரும் ஆச்சரியம் தெரிவித்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
