காஸா வாரியத்தில் சேராவிட்டால் 200% வரி… பிரான்ஸுக்கு டிரம்ப் மிரட்டல்!
காஸா அமைதி வாரியத்தில் இணையாவிட்டால் பிரான்ஸ் மதுபானங்களுக்கு 200 சதவிகித வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக அமைதிக்கு பாதகம் விளைவிக்கும் நாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு கடுமையான வரிகள் விதிக்கப்பட்டு வருகின்றன. உக்ரைன் போருக்கான காரணமாக இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதாக கூறி இந்தியாவுக்கும் 50 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் தற்காலிக போர் நிறுத்தத்துக்குப் பிறகும் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் நிலையில், போருக்குப் பின் அந்த பகுதியை நிர்வகிக்க ‘காஸா அமைதி வாரியம்’ உருவாக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்தார். இதில் இந்தியா உள்ளிட்ட வளர்ந்து வரும் நாடுகள் இணைய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் இந்த அழைப்பை பிரான்ஸ் பொருட்படுத்தாததால், அந்த நாட்டுக்கு எதிராக வரி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

டென்மார்க்கின் ஆர்க்டிக் பிரதேசம் தொடர்பாக அமெரிக்க அதிகாரி கூறிய கருத்தை பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கேலி செய்ததே இந்த எச்சரிக்கைக்கு காரணம் என கூறப்படுகிறது. இது குறித்து டிரம்ப் பேசுகையில், “பிரான்ஸ் மதுபானங்களுக்கு 200 சதவிகித வரி விதிக்கப் போகிறேன். அப்போது அவர் காஸா அமைதி வாரியத்தில் இணைவார்” என விமர்சித்தார். இந்த விவகாரம் உலக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
