செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2000 கன அடி நீர் திறப்பு!! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!

 
செம்பரம்பாக்கம்

தமிழகத்தில் மாண்டஸ் புயல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பள்ளிகள், கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இன்றும் பல மாவட்டங்களில் குறிப்பாக வடதமிழகத்தில் நள்ளிரவு முதலே அதிகனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகள் நிறைந்து வருகின்றன. 

அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ததால்  செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து ஏரியின் நீர்மட்டம்   உயர்ந்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கன அடி நீர் திறக்கப்பட்டது.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு!!

இந்நிலையில், இன்று   காலை 9 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 24 அடியுள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 22.25 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து 2,046 கன அடியாக உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

புழல் ஏரி

புழல் ஏரிக்கு நீர்வரத்து 623 கனஅடியில் இருந்து 704 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஏரியில் இருந்து வினாடிக்கு 159 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அதேபோல் சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து 657 கனஅடியில் இருந்து 900 கனஅடியாக உயர்ந்துள்ளது.  

இந்நிலையில் இடைவிடாத மழை காரணமாக  செம்பரம்பாக்கம் ஏரியில் தொடர்ந்து நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால் உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட உள்ளதாக காஞ்சிபுரம் ஆட்சியர்  தெரிவித்துள்ளார். காலை 9 மணி முதல் வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது இரு மடங்காக அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web