ரூ.2,000 நோட்டுகளின் 98.42 சதவீதம் திரும்பிவிட்டன... ரிசர்வ் வங்கி !

 
2000
 

புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளின் 98.42 சதவீதம் திரும்பப்பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த 2023, மே 19-ஆம் தேதி அறிவித்தது.

அந்த நாளில், புழக்கத்தில் ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் இருந்ததாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதன்பிறகு, 2026, ஜனவரி 31-ஆம் தேதி நிலவரப்படி ரூ.5,609 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. இதன் மூலம், 98.42 சதவீத நோட்டுகள் திருப்பி அளிக்கப்பட்டுள்ளன.

2023, அக்டோபர் 7 முதல், நாடு முழுவதும் உள்ள ரிசர்வ் வங்கியின் கிளைகளில் ரூ.2,000 நோட்டுகளை வங்கிக் கணக்கில் செலுத்த அல்லது மாற்றிக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 19 அலுவலகங்களிலும் நோட்டுகளை பெறவும் வங்கிக் கணக்கில் செலுத்தவும் இயலும். அஞ்சல் வழியாக அனுப்பப்படும் ரூ.2,000 நோட்டுகளும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!