2023-24ம் ஆண்டுக்கான 10, 11,12ம் வகுப்புக்கான தேர்வு தேதிகள் அறிவிப்பு!!

 
மாணவிகள்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் நேற்றுடன் பணிநாட்கள் முடிவடைந்துள்ளன. இன்று முதல் கோடை விடுமுறை . மாணவர்கள் உற்சாகத்துடன் விடுமுறையை கொண்டாடத் தயாராகிவிட்டனர். இந்நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான அதாவது 2023-24ம் கல்வி ஆண்டுக்கான  பள்ளி வேலைநாட்கள் 216. என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடைகால விடுமுறை முடிந்து 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதியும்   பள்ளிகள் திறக்கப்படும் என  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.  

மாணவிகள் விடுமுறை மகிழ்ச்சி
 2023-24 ஆண்டுக்கான  10 ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 8 ம் தேதியும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 18ம் தேதியும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19ம் தேதியும்  தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள்வெளியாகியுள்ளன.   அதே நேரத்தில் பள்ளிகள் திறந்தவுடன் மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் . 2023-24ம் கல்வியாண்டிற்கான 3 பருவத்தேர்வுகள் நடக்கும் நாட்கள்,விடுமுறை நாட்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

மாணவிகள்
முதல் பருவத்தேர்வு செப்டம்பர்.14 முதல் 27 வரையிலும், இரண்டாம் பருவத்தேர்வு டிசம்பர் 11 முதல் 22 வரையிலும் மூன்றாம் பருவத்தேர்வு ஏப்ரல் 18 முதல் 30 வரையிலும் நடைபெற உள்ளது. அதே நேரத்தில் செப்டம்பர்.28 முதல் அக்டோபர்.2 வரை 5 நாட்கள் முதல் பருவத்தேர்வு விடுமுறை. இரண்டாம் பருவத்தேர்வு  விடுமுறை டிசம்பர்.23 முதல் ஜனவரி 1 வரை 10 நாட்களும்,  மே 1 முதல் 31 வரை மூன்றாம் பருவத் தேர்வு கோடைகால விடுமுறையும் விடப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web