2024... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பைப் பயன்படுத்திக்கோங்க!

 
ராசிபலன்கள் ராசி ஜோதிடம்

பழைய கழிதலும், புதியன புகுத்தலும் தானே வாழ்க்கை. இந்த புத்தாண்டை, போன வருஷமே பரவாயில்லை என்று சொல்ல வெச்சுடாதே என்று பல ராசிக்காரர்கள் கலக்கத்துடனே வரவேற்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை... இந்த புத்தாண்டு பலருக்கும் அதிர்ஷ்டத்தையும், ஆரோக்கியத்தைக் கொண்டு வருகிறது. நாளை மார்கழி 16 திங்கட்கிழமை புத்தாண்டு பிறக்கிறது.

வரப்போகிற புதிய வருஷத்தில் கல்வி, வேலை, திருமணம், குழந்தை, செல்வம், சுகபோக வாழ்க்கை, சங்கடங்களில் இருந்து நிவர்த்தி என ஒவ்வொருவரின் தேவையும் மாறுபடுகிறது. மேல்படிப்பு, பணி இவைகளுக்காக வெளிநாடு செல்வதும் பலரது விருப்பம்.  12 ராசிக்காரர்களில் பிறக்கப்போகும் புத்தாண்டில்  குறிப்பிட்ட  ராசிக்காரர்கள் நினைத்ததை சாதிக்கப்போகிறார்கள். இதில்  கில்லியாக சொல்லி அடிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என பார்க்கலாம் வாங்க. 

துலாம்: 

சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட  துலாம் ராசிக்காரர்களுக்கு வரப்போகிற புத்தாண்டில் யோகம், கொண்டாட்டம் தான்.  இந்த புத்தாண்டில் குருபகவான்  சுபபலன்களை வாரி வழங்க தயாராக இருக்கிறார்.  தொட்டதெல்லாம் பொன்னாகும். எடுத்த காரியத்தில் வெற்றி நிச்சயம். பணியில் பதவி உயர்வு ,  பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். மந்தநிலை மறைந்து   நல்ல முன்னேற்றம் உண்டாகும்.  

ராசிபலன் rasibalan astrology rasi

விருச்சிகம்:

விருச்சிக ராசி நேயர்களே 2024ம் ஆண்டு உங்களுக்கு பொற்காலம்  தான்.  தொழிலில்  தாறுமாறான லாபம் கிட்டும்.  பணம் பல வழிகளில் வந்து சேரும். கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும்.  எதிர்பார்த்த ஆதாயம் கிட்டும். பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும். இழுபறியில் இருந்த பல விஷயங்கள் சுபபலன்களை அள்ளித் தரும். உற்சாகம் பெருகும். 

தனுசு: 
தனுசு ராசி நேயர்களே 2024 ம் ஆண்டில் நினைத்த காரியம் நிறைவேறப்போகிறது. சோதனைகளை கடந்து வந்த நீங்கள் சாதனைகளுக்கு சொந்தக்காரராகப் போகிறீர்கள். பணியிடத்தில் சவால் இருந்த போதிலும் குருபார்வையால்  எதையும் சமாளிக்கும் வல்லமை கிட்டு.  அதிகமாக உழைக்க தயாரானால் விரைவில் நல்ல முன்னேற்றம் பெறலாம். வெளிநாட்டு யோகம் கிட்டும். 

மகரம்: 

மகர ராசி நேயர்களே 2024ம் ஆண்டு  யோகங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது. உங்களது ராசியில் குரு மிக அற்புதமான பலன்களை அள்ளித் தரப்போகிறார். லட்சுமி கடாட்சம், அரசாங்க உதவி, தொழில் மாற்றம் நிகழப் போகிறது.  பணியிடத்தில் மாறுதல்கள் ஏற்பட்டாலும் தன்னம்பிக்கையுடன் உழைக்க பதவி உயர்வு பெறலாம். குரு பெயர்ச்சிக்குப் பிறகு பல வாய்ப்புக்கள் தேடி வரும். பணம் பல வழிகளில் தேடி வரும்.  

ராசிபலன்கள் ஜோதிடம்

கும்பம்: 

கும்ப ராசிக்காரர்களே... புத்தாண்டு யோக பலன்களை அள்ளித் தரப்போகிறது. பணிச்சுமை, பணி இடமாற்றம், சவால்கள் இருந்தபோதிலும் சமாளித்து  வெற்றிக்கனியை பறிப்பீர்கள். கேட்டவை எல்லாம் கிடைக்கப் பெறுவீர்கள். திடீர் அதிர்ஷ்டத்தால் திக்கு முக்காடப் போகிறீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். பெரிய மனிதர்கள் ஆதரவால் காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். 

மீனம்: 

மீன ராசிக்காரர்களே பிறக்கப்போகும்  புத்தாண்டில்  மதிப்பு, மரியாதை, அந்தஸ்து கூடும் ஆண்டாக அமையப்போகிறது. யோகமான ஆண்டாகவும் அமையப்போகிறது. இதனால் பணியிடத்தில்  நல்ல பெயரையும், தொழிலில் லாபங்களையும் பெறப்போகிறீர்கள்.   வெளிநாட்டு யோகம் பெறுவர்.  ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படலாம் என்ற போதிலும் சமாளித்து மீண்டு விடுவீர்கள். 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web