2026 சட்டமன்ற தேர்தல்: நாம் தமிழர் கட்சியின் வேதாரண்யம் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு!

2026 சட்டமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்றும், வேதாரண்யம் தொகுதி வேட்பாளராக இடும்பாவனம் கார்த்தி போட்டியிட உள்ளதாகவும் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இப்போதில் இருந்தே கூட்டணி குறித்து அரசியல் கட்சிகள் பேசத் தொடங்கிவிட்டன. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலில் களம் காண உள்ளனர். இதில் அதிமுக- பாஜக இடையே கிட்டத்தட்ட கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிகளுடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் என அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
அரசியலில் களம் கண்டு முதல் தேர்தலை எதிர்கொள்ள விஜய்யின் தமிழக வெற்றிக்கழகமும் தற்போது வரை தனித்து போட்டியிடும் சூழலில் தான் உள்ளது.
இந்நிலையில், சட்டசபையில் தேர்தலில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்துள்ளது. அதன்படி, வேதாரண்யம் தொகுதியில் இடும்பாவனம் கார்த்தி போட்டியிடுகிறார்.
இவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர். நாளைய தினம் நடைபெற உள்ள வேட்பாளர் அறிமுக கலந்தாய்வு கூட்டத்தில் இடும்பாவனம் கார்த்தி அறிமுகப்படுத்தப்பட உள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!