2026 தேர்தலில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்? ஐடிபிஐ கருத்துக்கணிப்பு !

 
2026

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் அமைப்பான ஐ.டி.பி.ஐ., 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. இதில் முதல்-அமைச்சராக வரும் வாய்ப்பு யாருக்கு என்ற கேள்விக்கு 55 சதவீதம் பேர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்துள்ளனர். இரண்டாவது இடத்தில் விஜய்யும், மூன்றாவது இடத்தில் எடப்பாடி பழனிசாமியும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

2021 தேர்தல் அறிக்கையை திமுக நிறைவேற்றியதா என்ற கேள்விக்கு 47 சதவீதம் பேர் இல்லை என்றும், 25 சதவீதம் பேர் ஆம் என்றும் தெரிவித்துள்ளனர். மு.க.ஸ்டாலின் செயல்பாடு சரியில்லை என 54 சதவீதம் பேர் கூறியுள்ளனர். விஜய் அரசியல் வருகையால் திமுகவுக்கே அதிக பாதிப்பு என்றும், அடுத்து விசிக, அதிமுக பாதிக்கப்படும் என்றும் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப் பங்கில் திமுக 30.62 சதவீதம் பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 26.39 சதவீதமும், தவெக 21.07 சதவீதமும் பெறும் என கணிப்பு வெளியாகியுள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு 7.50 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும், நான்கு முனைப்போட்டி நிலவினாலும் திமுக வலுவான கூட்டணியுடன் முன்னிலை வகிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!