2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் .... நீதா அம்பானி திட்டவட்டம்!

 
நீதா அம்பானி


ஹார்வர்ட் இந்தியா மாநாடு இன்று பிப்ரவரி 18ம் தேதி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்திய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், விண்ணப்பகர்கள், மற்றும் பல்வேறு துறைகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.   இந்த முறை ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் தலைவர் நீதா அம்பானி  கலந்து கொண்டு பேசியதோடு நகைச்சுவையாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

மோடி


அந்த வகையில் மாநாட்டில்  ஒருவர் நீதா அம்பானியிடம் இந்திய பிரதமர்  மோடி மற்றும்  முகேஷ் அம்பானி ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்யும்படி  கேட்டுக்கொண்டார். பலரும் அவர் தன்னுடைய கணவர் முகேஷ் அம்பானி பெயரை தான் சொல்லப்போகிறார் என எதிர்பார்த்த நிலையில், நீதா அம்பானி  இரண்டு பக்கமும் சமமான பதிலை கூறி அதிரவைத்தார்.   இது குறித்து நீதா அம்பானி “நான் நினைக்கிறேன், பிரதமர் மோடி ஜி நாட்டிற்கு நல்லவர்,  என் கணவர் முகேஷ் என் வீட்டிற்கு நல்லவர்,”  என சிரித்துக்கொண்டே பதில் அளித்தார். இதனை கேட்ட அங்கிருந்தவர்கள் சிரித்துக் கொண்டே வாழ்த்துக்களை தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்த  புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

ஒலிம்பிக்


மேலும், மாநாட்டில் பேசிய நீதா அம்பானி ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா விரைவில் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக உறுதி கூறினார்.  ஒலிம்பிக் போட்டிகளை நிச்சயமாக இந்தியா விரைவில் நடத்தும் என்று நம்புகிறேன். உலகில் 3 வது பொருளாதார நாடாக இந்தியா இருந்து வருகிறது. இருப்பினும், ஏற்கனவே, 9 நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தி முடித்து விட்டன. இதில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தாத நாடு எதுவென்றால் அது இந்தியாவாக தான் இருக்க முடியும்.  2036 ம் ஆண்டு இந்தியா ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா நடத்தும் அதனை பார்க்க விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web