வந்து குவிந்த விண்ணப்பங்கள்.... நீட் தேர்வுக்கு 20.8 லட்சம் பேர் பதிவு!

 
நீட் நுழைவுத்  தேர்வு

இந்தியாவில் மருத்துவ படிப்புக்களை படிக்க நீட் தேர்வு எழுத வேண்டியது அவசியம். நடப்பாண்டுக்கான நீட் தேர்வு மே 7ம் தேதி நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் இடங்கள் 1.4 லட்சம் உள்ள நிலையில், நடப்பு ஆண்டில் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர்.  இளங்கலை, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு தனித்தனியே நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு  மார்ச் மாதம் முதல் வாரத்தில் நடைபெற்றது.

நீட் தேர்வு

இளநிலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் தேர்வுகள்  மே 7 ம் தேதி  நடைபெற உள்ளது.  இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 6ம் தேதி வரை கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை படி ஏப்ரல் 15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.  தற்போது  நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் பரிசீலிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, நீட் தேர்வுக்கு நடப்பு ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 20.8 லட்சம் மாணவ மாணவிகள் விண்ணப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த எண்ணிக்கை  கடந்த ஆண்டை விட இது 2.57 லட்சம் அதிகம். 1184502 மாணவிகளும் 902930 மாணவர்களும் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். மாநில வாரியான கணக்கெடுப்பில்  அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2.77லட்சம்  பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

தமிழகத்தில் நீட் தேர்வு கூடாது! ஆட்டத்தை ஆரம்பித்த திமுக! மத்திய அரசிடம் அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல்!

ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம்  மாநிலங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நீட் தேர்வுக்கு தயாராக கூடுதல் அவகாசம் வேண்டும் எனவும் இதனால் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில் கொரோனா பரவல் அதிகரித்த போதிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து அதன் அடிப்படையில் நீட் தேர்வுகள் குறித்த தேதியில் திட்டமிட்டபடி நடத்தப்படும்.  இதனால் நீட் தேர்வுகள்  தள்ளிவைக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web