பயணிகளின் கனிவான கவனத்திற்கு... ஜூன் 26, 28, 29 தேதிகளில் 21 புறநகர் ரயில்கள் ரத்து!

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூன் 26, 28, 29ம் தேதிகளில் கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கவரப்பேட்டை – கும்மிடிப்பூண்டி ரயில் நிலையங்களுக்கு இடையே ஜூன் 26, 28, 29 தேதிகளில் 21 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்துள்ளது.
அதன்படி பகல் 1.15 மாலை 5.15 வரை பணிகள் நடப்பதால் கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் தேவை மற்றும் வசதிகளுக்காக ஜூன் 26, 28, 29-ல் சென்னை சென்ட்ரல் – பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!