6 அடுக்குகளில், 2150 கார்கள்!! விமானநிலையத்தில் மல்டி லெவல் கார் பார்க்கிங்!!

 
கார் பார்க்கிங்

தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. 24 மணிநேரமும் பரபரப்பாக செயல்பட்டு வரும் இந்த  விமான நிலையத்திற்கு தொடர்ந்து பயணிகள் வந்து கொண்டே இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. பயணிகளை வரவேற்க வருபவர்கள், விமானத்தில் பயணம் செய்ய வருபவர்கள் வந்து இறங்கும் டாக்சி , டூவீலர்களால் விமான நிலையம் பல நேரங்களில் நெருக்கடியை சந்தித்து வந்தது. இதனை சீராக்கும் வகையில் ரூ.250 கோடி செலவில்  பல அடுக்கு கார் நிறுத்தகம்  கட்டப்பட்டது. இந்த கார் நிறுத்தகம் நேற்று நள்ளிரவு முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இவை முழுக்க முழுக்க தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். 

விமான நிலையம்
சுமார் 2.5 லட்சம் சதுர அடி பரப்பளவில், ஒரே நேரத்தில் 2,150 கார்கள் நிறுத்தும் வகையில் 6 அடுக்குமாடிகள் கொண்ட நவீன கார் பார்க்கிங் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.  புதிதாக கட்டப்பட்ட நவீன கார் பார்க்கிங் கட்டிடம் பயணிகளின் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு பக்கத்தில் உள்நாட்டு விமானநிலையத்துக்கு வரும் வாகனங்களும், மறுபக்கத்தில் வெளிநாட்டு விமானநிலையத்திற்கு வரும் வாகனங்களும் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கார் பார்க்கிங்கில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் பாயிண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் மாற்று திறனாளிகளின் வாகனங்கள் நிறுத்துவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாகனங்கள் உள்ளே நுழையும்  நேரத்தை கம்ப்யூட்டரில் பதிவு செய்து டோக்கன் வழங்கப்படுகிறது.இதன்பிறகு  அவர்கள் இரு பகுதிகளில் பிரிந்து வாகனங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும். டோக்கன்களை தவறவிட்டவர்களுக்கு  இருசக்கர வாகனங்களுக்கு ரூ.150, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.


டாக்சி போன்ற வாகனங்களுக்கு 10 நிமிட இலவச நேரம் தொடரும்.அதே நேரத்தில் விமான நிலைய ஊழியர்களுக்கு இலவச பார்க்கிங் வசதி உண்டு. மற்ற ஊழியர்களுக்கு சலுகை கட்டணத்திலும், விமானநிலைய ஒப்பந்த பணியாளர்களுக்கு ரூ.250 மாதாந்திர கட்டணமும் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை விமானநிலையத்திற்கு வரும் பத்திரிகை, ஊடகம் மற்றும் காவல்துறையினருக்கு  பார்க்கிங் கட்டணம் கிடையாது. இவர்களிடம் எத்தனை கட்டணம் என்பதையும், விமானநிலையத்தில் நிரந்தரமாக இயங்கி வரும் ப்ரீபெய்டு டாக்சி கட்டணம் குறித்தும் புதிய ஒப்பந்ததாரர் முடிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

விமான நிலையம்
சென்னை விமானநிலையத்திற்கு  செல்லும் பயணிகளின் சொந்த வாகனங்கள், விமானநிலைய போர்டிகோ வரை செல்லலாம். இவர்களுக்கு 10 நிமிடம் இலவச நேரம் உண்டு.  வாடகை கார்களில் வருபவர்கள், போர்டிகோ செல்லும்போதே  ரூ.40 டோக்கன் வாங்கி வரவேண்டும்.  புதிய கார் பார்க்கிங் வளாகம் இன்று காலை முதல் செயல்பாட்டுக்கு வந்ததால், பழைய கார் பார்க்கிங் பகுதி மூடப்படுகிறது. அப்பகுதியில் விரைவில் பூங்காக்கள் அமைக்கப்படுமெ ந இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web