பட்டாசு ஆலை வெடி விபத்தில் 22 பேர் உயிரிழப்பு, பலர் கவலைக்கிடம்!
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் காக்கிநாடா மாவட்டம் பகுதியில் உள்ள வெடிகுண்டு தயாரிப்பு ஆலையில் பிப். 28ஆம் தேதி ஏற்பட்ட பெரும் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. வெட்லாபாலேம் கிராமத்தில் இயங்கி வந்த சான்றளிக்கப்பட்ட ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடிப்பால் பலர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பலியானவர்களில் பெண்களும் அடங்கியிருப்பது சோகத்தை அதிகரித்துள்ளது.
STORY | Several feared injured in blast at crackers unit in Andhra Pradesh
— Press Trust of India (@PTI_News) February 28, 2026
Several people are feared injured in an explosion at a crackers unit in Kakinada district on Saturday.
READ: https://t.co/Z4WeVmJleK
VIDEO: pic.twitter.com/BSTAyURxeg
முதல் கட்டமாக 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிய நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்ததால் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது. பலர் தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்பு பணிகள் இரவு முழுவதும் தீவிரமாக நடைபெற்றன.

சம்பவத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. கடுமையான தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
