பாகிஸ்தான் சிறையிலிருந்து இந்திய மீனவர்கள் 22 பேர் விடுதலை!

 
பாகிஸ்தான்

பாகிஸ்தானின் கராச்சி சிறையில் இருந்து இந்திய மீனவர்கள் 22 பேர் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2022ம் ஆண்டு டிசம்பர் வரை குஜராத்தை ஒட்டிய அரேபிய கடல் பகுதியில், கடல் எல்லைக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இந்திய மீனவர்கள் 22 பேரை பாகிஸ்தானின் கடற்படையினர் கைது செய்தனர்.

பாகிஸ்தான்

அதன் பின்னர் பாகிஸ்தானின் கராச்சி சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் அனைவரும் சமீபத்தில் விடுவிக்கப்ப்டனர்.இதனை தொடர்ந்து இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்கள் குஜராத்தின் வதோதராவை அடைந்தனர்.

பாகிஸ்தான்

இவர்களில் 18 பேர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள். 3 பேர் டையூ யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். மற்றொருவர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர். பாகிஸ்தான் சிறையில் இன்னும் 195 இந்திய மீனவர்கள் உள்ளனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web