நைஜீரியாவில் 22 இந்தியர்கள் கைது… கொகைன் பறிமுதல்!
நைஜீரியாவில் கொகைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 22 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லகோஸ் நகரில் உள்ள அபாபா துறைமுகத்தில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிர சோதனையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

மார்ஷல் தீவுகளில் இருந்து வந்த ‘அருணா ஹுல்யா’ என்ற சரக்குக் கப்பலில் இருந்து 31.5 கிலோ கொகைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கப்பலின் மாஸ்டர் சர்மா சசி பூஷண் உட்பட 21 மாலுமிகள் கைது செய்யப்பட்டனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதேபோல் போா்னோ பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் விநியோகத்தையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அங்கு 2 விநியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டு, பெருமளவு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவங்கள் நைஜீரியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
