22,000 விற்பனை நிலையங்கள்! பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர் தீப்சிங் பூரி அதிரடி!

 
ஷேர் ஆயில் தொழிற்சாலை எண்ணெய்

இந்திய நாட்டின் எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய் வதற்காக, வினியோகத்தை பல்வகைப்படுத்துதல், அகழ்வு மற்றும் உற்பத்தியை அதிகரித்தல், எரிவாயு வடிவத்தில் எரிசக்தியை அணுகுதல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் / பேட்டரி வாகனங்கள் என்ற 4 அம்ச திட்டத்தை மத்திய அரசு கொண்டுள்ளது.

கடந்த 2006–2007ம் ஆண்டில் இந்தியா 27 நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணை கொள்முதல் செய்த நிலையில், இப்போது 39 நாடுகளிடம் இருந்து கொள் முதல் செய்கிறோம். நமது வினியோகஸ்தர் நாடுகளில், கொலம்பியா, ரஷ்யா, லிபியா, கபோன், மத்திய கினியா நாடுகள் இணைந்துள்ளன. அதேநேரத்தில், அமெரிக்கா, ரஷ்யாவுடன் உறவுகளை, வலுப்படுத் தியுள்ளோம். நாட்டில், 2021 டிசம்பர் மற்றும் 2022 டிசம்பருக்கு இடையே, டீசல் விலை 3 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், இந்த கால கட்டத்தில் அமெரிக்கா வில் 34, கனடாவில் 36, ஸ்பெயினில் 25, இங்கிலாந் தில் 10 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. 

பெட்ரோல்  தொழிற்சாலை

2021 நவம்பர், 2022 மே மாதங்களில் கலால் வரி குறைப்பு அறிவிப்பால், பெட்ரோல் மீது லிட்டருக்கு 13 ரூபாயும், டீசல் மீது லிட்டருக்கு 15 ரூபாயும் குறைந்துள்ளது. நாட்டில், 2013-2014ல் பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு 1.53 சதவீதமாக இருந்தது. இப்போது, 10.17 சதவீதமாக உள்ளது. வரும் 2030க்குள் பெட்ரோலு டன் எத்தனால் கலப்பு 20 சதவீதமாகும். இதற்காக, பானிபட் (அரியானா), பத்தின்டா (பஞ்சாப்), பர்ஹா (ஒடிசா), நுமலிகார் (அசாம்) மற்றும் தாவன்கெரே (கர்நாடகா) ஆகிய இடங்களில், 2ம் தலைமுறை எத்தனால் சுத்திகரிப்பு நிலையங்களை மத்திய அரசு கட்டமைக்கிறது.

பெட்ரோல் தொழிற்சாலை

ஆண்டுக்கு குறைந்தபட்சம் 50 லட்சம் டன் அளவுக்கு பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் திறனை உருவாக்குவதற்காக தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக் கத்தில் மத்திய அரசு 19 ஆயிரத்து 744 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. அதேநேரத்தில், வரும் 2024 இறுதிக்குள், பொதுத்துறை எண்ணை நிறுவனங்கள், நாடு முழுவதும் 22 ஆயிரம் மாற்று எரிபொருள் சில்லறை விற்பனை நிலையங்கள் அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளது என்றார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

From around the web