உஷார் மக்களே... அடுத்த 3 நாட்களுக்கு பலத்த எச்சரிக்கை... 23 மாவட்டங்களுக்கு அலர்ட்!

 
rain


தென்மேற்கு வங்கக்கடலில்  நிலவி வரும் மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை ஜூலை 6ம் தேதி வரை நீடிக்கும் எனத் தெரிகிறது. அந்த வகையில் இன்று அடுத்த 3 மணி நேரத்தில் 23 மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 23 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை  மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்று காலை முதலே பரவலாக மழை பெய்து வரும் நிலையில் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழகம்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

school rain

அதே சமயம் இன்று நீலகிரி, கோவை,  கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம்  தமிழகம், புதுச்சேரி   மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னனுடன் கூடிய லேசானது மதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவுறுத்தியுள்ளது.திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில்  மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் சென்னையில் கனமழையும் பெய்யக்கூடும்.  

School Student in Rain

நாளை  ஜூலை 4ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் கன முதல் மிக கனமழையும்  திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web