23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வடமேற்கு நோக்கி சென்று, சென்னையிலிருந்து சுமார் 740 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது என வானிலை மையம் தெரிவித்தது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மாண்புரம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை வரும் வாய்ப்பு உள்ளது.

மேலும், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர் போன்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
