தமிழகம் முழுவதும் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் என 23 பேர் பணி நீக்கம்... அன்பில் மகேஷ் அதிரடி!

தமிழகத்தில் பள்ளிகளில் பாலியல் தொந்தரவு சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோரிடமும், வகுப்பு ஆசிரியரிடமும் நடந்தவற்றை கூறுகின்றனர். இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர் மற்றும் பள்ளி ஊழியர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்துள்ளனர்.
மேலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தால் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என 23 பேரை பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 46 பேர் மீது தீவிர விசாரணை நடந்த நிலையில் 23 பேர் மீது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் பணியில் இருந்து நீக்கி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!