நாடு முழுவதும் 2300 ஏடிஎம் மையங்கள் மூடல்... டிஜிட்டல் இந்தியா எதிரொலி!
இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது. யூபிஐ, மொபைல் பேங்கிங், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் பரவலாக பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக நாடு முழுவதும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் சுமார் 2,300 ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஏடிஎம் பராமரிப்புக்கான செலவுகளை குறைக்கும் நோக்கில் வங்கிகள் இந்த முடிவை எடுத்து வருகின்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஏடிஎம் பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கிராமப்புறங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளதால் ஏடிஎம்களின் தேவை குறைந்துள்ளதாக வங்கிகள் விளக்குகின்றன.

இது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வெற்றியாக பார்க்கப்பட்டாலும், சிலருக்கு கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முதியவர்கள் மற்றும் இணைய வசதி குறைந்த பகுதிகளில் வாழும் மக்கள் சிரமம் அடையக்கூடும் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். ஏடிஎம் மையங்களை முழுமையாக மூடாமல், தேவையான இடங்களில் தொடர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
