23 வயது இளம்பெண் மாரடைப்பால் உயிரிழப்பு!! திருமண விழாவில் நடனம் ஆடிய போது சோகம்!!

 
ஜோஸ்னா லூயிஸ்


இன்றைய காலகட்டத்தில் திருமண வரவேற்புக்கள் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலும் மணமகன் எங்கிருந்தோ குதித்து இறங்குகிறார். மணமகள்  நடனம் ஆடிக்கொண்டே வரவேற்பு மேடைக்கு வருகிறார். ஆனால் சில நேரங்களில் இப்படி நடத்தப்படும் திருமண வரவேற்புக்களில் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடுகின்றன. அதே நேரத்தில் முன்பெல்லாம் 60 வயதுக்கு மேல் வந்த  அனைத்து நோய்களும் தற்போது 20களிலேயே தொடங்கி விடுகின்றன.

வரவேற்பு

இது பெரும் அச்சத்தை பெற்றோர் மத்தியில் விளைவித்து வருகிறது. பெங்களூரு, கர்நாடகா மாநிலம் உடுப்பு மாவட்டம் ஹவாஞ்சே பகுதியில்  வசித்து வருபவர் ஜோஸ்னா லூயிஸ். இவருக்கு வயது 23. இவர் தன்னுடைய உறவினர் வீட்டில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்றார். அங்கு மணப்பெண்ணுடன் ஆடிக்கொண்டே வரவேற்பு நிகழ்ச்சி மேடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார்.

அழுகிய நிலையில் 15 வயது சிறுமியின் சடலம்- கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

உறவினர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். திடீர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 வயது இளம்பெண்  மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இப்போதைய காலகட்டத்தில்  இளம் வயதிலேயே மாரடைப்பு சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது எதிர்காலம் குறித்த அச்சதை ஏற்படுத்தியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

மப்பேறி தள்ளாடும் நாய்!! மதுவை குடித்ததால் பரிதாபம்!!

From around the web