2025-ல் 24,600 இந்தியர்கள் நாடுகடத்தல்… அமெரிக்கா அல்ல, சௌதி முதலிடம்!
விசா கெடுபிடிகள் காரணமாக இந்தியர்கள் நாடுகடத்தப்படுவதாக செய்திகள் அதிகரித்துள்ள நிலையில், அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. 2025ஆம் ஆண்டில் மட்டும் 81 நாடுகளிலிருந்து 24,600 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த தகவலை மாநிலங்களவையில் வெளியுறவு விவகாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Over 24,600 Indians were deported from 81 countries in 2025 as per the ministry of external affairs data tabled in Rajya Sabha. It was not America but Saudi Arabia that recorded the highest deportations over 11,000 people in 12 months.
— KRK (@kamaalrkhan) December 27, 2025
And trust me, deportation will increase day… pic.twitter.com/Qzrtm8C2CI
அமெரிக்காவிலிருந்துதான் அதிகமானோர் நாடுகடத்தப்பட்டிருப்பார்கள் என்ற பொதுவான எண்ணம் தவறானது. முதலிடத்தில் இருப்பது சௌதி அரேபியா. கடந்த 12 மாதங்களில் அங்கிருந்து மட்டும் 11,000 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவிலிருந்து 3,800 பேர் மட்டுமே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் அல்லது தனியார் நிறுவனங்களில் முறையற்ற வகையில் பணியாற்றியவர்கள்.

மியான்மரிலிருந்து 1,591 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளனர். வேலை தேடி சென்று சைபர் குற்றவாளிகளிடம் சிக்கியவர்களே இவர்களில் பலர் என கூறப்படுகிறது. ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து 1,469 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். விசா காலாவதி, வேலை அனுமதி இல்லாமை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. மலேசியா, தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளும் இந்த பட்டியலில் உள்ளன. வெளிநாட்டில் சிறு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் செல்வோர், பின்னர் தவறுகளில் சிக்கி நாடு கடத்தப்படுவது அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
