24 வயது பிரபல நடிகை மாரடைப்பால் காலமானார்!! சோகத்தில் திரையுலகம்!!

 
ஐந்த்ரிலா சர்மா

பிரபல பெங்காலி நடிகை ஐந்த்ரிலா சர்மா. இவருக்கு வயது 24. நடிகை ஐந்த்ரிலா சர்மா, கடந்த சில வாரங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையிலேயே அடுத்தடுத்து மாரடைப்பு ஏற்பட்டது. கோமா நிலையில் நினைவு திரும்பாமலே நேற்று நவம்பர் 20ம் தேதி  உயிரிழந்தார். நவம்பர் 1ம் தேதி ஐந்த்ரிலா சர்மா கோமாவிற்கு தள்ளப்பட்ட நிலையில் மூளை சாவு ஏற்பட்டது.

ஐந்த்ரிலா சர்மா

அவரின் மண்டையோட்டுக்குள் தொடர்ந்து ரத்தக்கசிவு ஏற்பட்டது. இதனால், இடது முன்பக்க டெம்போரோபரியட்டல் டி-கம்ப்ரசிவ் கிரானியோட்டமி அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.  ஐந்த்ரிலா சர்மா ஏற்கனவே , புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்து கொண்டிருந்தவர்.  மேற்கு வங்காளத்தில் உள்ள பெர்ஹாம்பூரில் பிறந்தவர்

rip

 அவர் ஜுமுர் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமாகி தொடர்ந்து, மகாபீத் தாராபீத், ஜிபோன் ஜோதி மற்றும் ஜியோன் கதி போன்ற நிகழ்ச்சிகளில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர். இவர் அமி திதி நம்பர் 1 மற்றும் லவ் கஃபே  படங்களிலும்  இவருடைய நடிப்பு பேசப்பட்டது. மிக சின்னஞ்சிறு வயதிலேயே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு , கோமாவிலேயே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தது திரையுலக வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!

திகில் வீடியோ!! 5 அடி முதலையை விழுங்கிய மலைப்பாம்பு!!

வைரல் வீடியோ!! என் குளியலறைக்கு பூட்டு இல்ல!! ஜான்வி ஜாலி ரவுண்ட் அப் !!

வீடியோ!! ராஜநாகத்துடன் சண்டையிட்டு குஞ்சுகளை காத்த தாய்க்கோழி!!

From around the web