தினமும் குளிக்க 25 லிட்டர் பால்... தூங்க ரோஜாப்பூ மெத்தை! தயாரிப்பாளரை தெறிக்க விட்ட பிரபல நடிகர்!

 
ரவி கிஷன்

தன்னுடைய படத்தில் நடிப்பதற்காக பிரபல ஹீரோவிடம் சென்று கால்ஷீட் கேட்ட தயாரிப்பாளரிடம், நான் பாலில் தான் குளிப்பேன். தினமும் நான் குளிப்பதற்கு 25 லிட்டர் பாலும், படுத்து தூங்குவதற்கு ரோஜாப்பூ மெத்தையும் வேண்டும் என்று கேட்டு, தயாரிப்பாளரைத் தெறித்து ஓட விட்டிருக்கிறார் பிரபல போஜ்புரி திரைப்பட நடிகர் ரவி கிஷன். நம்மூர் நடிகர்கள் எவ்வளவோ பரவாயில்லை என்கிறீர்களா?

தமிழ் பட தயாரிப்பாளர்களிடம் கேட்டால், நம்ம ஊர் நடிகர்கள் பற்றியும் இப்படி பெரிய லிஸ்ட் கொடுப்பாங்க. இது ஏதோ கிசு கிசு செய்தி கிடையாது. ஆமாம்.. நான் அப்படி தான் கேட்டு, தயாரிப்பாளரை ஓட விட்டேன் என்று சமீபத்திய பேட்டியில் நடிகர் ரவி கிஷன் கூறியிருக்கிறார்.

ரவி கிஷன்

பிரபல போஜ்புரி நடிகரும், பா.ஜ.க. எம்பியுமான ரவி கிஷன் சமீபத்தில் அளித்த பேட்டியில், தன்னுடைய படங்கள் தொடர்ந்து ஹிட்டடித்து, தான் சூப்பர் ஸ்டாரான பிறகு தனக்கு பெருமை ஏற்பட்டதாக அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் 'கேங்க்ஸ் ஆப் வசேபூர்' படத்தில் தனக்கு நடிக்க கிடைத்த வாய்ப்பைத் தன்னுடைய திமிர் காரணமா இழந்ததாக கூறியுள்ளார். அந்த பத்திற்காக கேட்ட போது, குளிப்பதற்கு பாலும், தூங்குவதற்கு ரோஜா மெத்தையும் கேட்டதாக சிரித்துக்கொண்டே கூறியுள்ளார். 

ரவி கிஷன்

அந்த சமயங்களில் நான் என்னை ஒரு பெரிய ஸ்டாரால நினைத்துக் கொண்டேன். தினமும் 25 லிட்டர் பால் தயார் செய்ய முடியாததால் என்னை அவர்கள் படத்தில் நடிக்க வைக்கவில்லை. திடீரென பணமும்,  புகழும் கிடைத்தால் மனம் இப்படி தான் தளர்ந்து போகுது. குறிப்பாக மும்பை போன்ற பெரு நகரங்கள் யாரையும் பைத்தியம் பிடிக்க வைக்கும். அந்த சமயங்களில் நான் என்னுடைய கட்டுப்பாட்டை இழந்திருந்தேன் என ஒப்புக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web