கனமழையால் மின்னல் தாக்கி 25 பேர் பலி... 2 நாட்களாக தொடரும் துயரம்!!
உத்தரப்பிரதேசத்தில் 14 மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதில் மின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்தனர். திடீர் வானிலை மாற்றம் காரணமாக உத்தரப்பிரதேசத்தில் பல மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. காஸ்கஞ்ச் மற்றும் பதேபூர் பகுதிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளன. அடுத்த 2 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 14 மாவட்டங்களில் மின்னல் தாக்கி, 8 பெண்கள் மற்றும் 7 குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடங்குவர். மின்னல், புயல் அல்லது மழை தொடர்பான பேரிடர்களால் மனிதர்கள் அல்லது விலங்குகள் உயிரிழந்தால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண நிதி உடனடியாக வழங்க வேண்டும். பயிர்கள் சேதம் குறித்து கணக்கீடு நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
