10ம் வகுப்புக்கு 25 % பாடங்கள் குறைப்பு... அமைச்சர் அறிவிப்பு!

 
மாணவிகள் அரசு பள்ளி

கேரள மாநிலம் கொல்லத்தில் கடந்த ஆண்டு பள்ளியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த எட்டாம் வகுப்பு மாணவன் மிதுனின் குடும்பத்தினருக்கு சாரணர் இயக்கம் சார்பில் இலவச வீடு கட்டி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி கொல்லம் தேவலக்கரையில் நேற்று நடைபெற்றது. இதில் கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் அதிகமாக உள்ளதாக நீண்ட காலமாக புகார்கள் வருவதாக தெரிவித்தார். குறிப்பாக சமூக அறிவியல் பாடத்தில் பாடப்பளு அதிகம் என மாணவர்கள் கூறி வருவதாகவும் அவர் கூறினார்.

இதனை கருத்தில் கொண்டு, அடுத்த கல்வியாண்டு முதல் பத்தாம் வகுப்புக்கு 25 சதவீதம் பாடங்கள் குறைக்கப்படும் என அமைச்சர் சிவன்குட்டி அறிவித்தார். இந்த முடிவு மாணவர்களுக்கு பெரிய நிம்மதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!