தமிழ்நாட்டுக்கு 2.5 டி.எம்.சி. காவிரி நீரை திறந்து விட உத்தரவு!

தமிழ்நாடு கர்நாடகா இடையே காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்ச்சியாக பிரச்னை நீடித்து வருகிறது. இதனை தீர்த்து வைக்க தமிழக அரசு பல்வேறு சட்டப் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் வரையறுத்த 177.25 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு திறந்துவிடுவதை கண்காணிப்பது இதன் பொறுப்பு. அத்துடன், இரு மாநிலங்களுக்கு இடையிலான மழைப் பொழிவு, அணைகளின் நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்து தண்ணீர் பங்கீடு குறித்து இந்த அமைப்புகள் உத்தரவு பிறப்பித்துள்ளன.
கர்நாடகாவில் கடந்த ஆண்டு காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையே தண்ணீர் திறப்பில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த அளவை விட அதிகமாகவே தண்ணீர் வந்தது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த பல மாதங்களாக 100 அடிக்கு மேல் நீடித்து வருகிறது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 39வது கூட்டம் நேற்று அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் காணொலி மூலமாக நடைபெற்றது. அதில் தண்ணீர் இருப்பு, தேவை குறித்து இரு மாநிலங்களிடமும் கருத்து கேட்டறியப்பட்டது. முடிவில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு மே மாதம் 2.5 டி.எம்.சி. தண்ணீரை திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!