பெண்களுக்கு மாதம் ரூ25000/- ... மத்திய அரசின் புதிய திட்டம்?
‘Women Work from Home Scheme’ என்ற பெயரில் மத்திய அரசு மாதம் ரூ.25,000 வழங்கும் திட்டம் அறிமுகம் செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால், இப்படியான எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை என PIB Fact Check தெளிவுபடுத்தியுள்ளது.
மத்திய அரசு பெண்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்து ஊதியம் வழங்கும் திட்டம் வெளியிடவில்லை என்றும் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது என கூறப்பட்டுள்ளது.
போலி தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், சந்தேகமான தகவல்களை 87997 11259 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி உண்மை நிலையை சரிபார்க்கலாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
