சமஸ்கிருதத்துக்கு ரூ2533கோடி ... தமிழுக்கு வெறும் ரூ13 கோடி!

மத்திய பாஜக அரசு மொழி பாகுபாடு காட்டிவருவதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், அதனை உறுதிபடுத்தும் வகையில் சமஸ்கிருத மொழியை மட்டும் மேம்படுத்த மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்வது ஆர்.டி.ஐ. மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2014-15 முதல் 2024-25 வரையிலான 10 ஆண்டுகளில் சமஸ்கிருத மேம்பாட்டுக்கு ரூ.2,533 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
2004ல் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழைவிட 2005ல் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமஸ்கிருத மொழிக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.230 கோடியை அள்ளிக்கொடுத்த மத்திய அரசு மற்ற செம்மொழிகளுக்கு கிள்ளிக்கொடுத்திருக்கிறது. அதாவது தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட மற்ற 5 செம்மொழிகளுக்கு ஆண்டுக்கு வெறும் ரூ.13 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழ் உட்பட 5 மொழிகளுக்கு ஒதுக்கிய நிதியை விட சமஸ்கிருதத்துக்கு 17 மடங்கு அதிகமாக வழங்கியிருக்கிறது. சமஸ்கிருத மொழியை விட 22 மடங்கு குறைவாக தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கு வெறும் ரூ.147.56 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியிருப்பதும், சமஸ்கிருத மொழிக்கு ஒதுக்கிய நிதியில் வெறும் 5% மட்டுமே மற்ற 5 மொழிகளுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதும் ஆர்.டி.ஐ மூலம் தெரியவந்துள்ளது
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!