இந்திய எல்லையில் 255 பாகிஸ்தான் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

 
ட்ரோன்
 

இந்தியா–பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியாக போதைப் பொருள்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் கடத்தும் முயற்சிகள் நாளுக்கு நாள் பலமாகிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக ட்ரோன்கள் மூலம் தமிழகத்தையும் வடஇந்திய எல்லைகளையும் ஊடுருவும் செயல் அதிகரித்துள்ள நிலையில், பிஎஸ்எஃப் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தாண்டு மட்டும் 255 ட்ரோன்கள் எல்லை அருகே சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன என்பது அதிர்ச்சி தகவல்.

அமிர்தசரஸில் பிஎஸ்எஃப் மண்டலத் தலைவர் அதுல் ஃபுல்சேல் கூறுகையில், குளிர்கால பனிமூட்டத்தை மறைவாக பயன்படுத்தி பாகிஸ்தான் மூலம் வரும் ஊடுருவல் மற்றும் கடத்தல்களை தடுக்க நவீன கண்காணிப்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆறுகளின் கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பிஎஸ்எஃப் – பஞ்சாப் காவல்துறை இணைந்து சிறப்பு கூட்டு சோதனைகளையும் நடத்தி வருகின்றனர்.

சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்களிலிருந்து 329 கிலோ ஹெராயின், 16 கிலோ ஐஸ், 191 ஆயுதங்கள், 12 கையெறி குண்டுகள், 10 கிலோவுக்கும் மேற்பட்ட வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஊடுருவ முயன்ற 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், கடத்தலில் ஈடுபட்ட 19 பாகிஸ்தானியர்களும் 240 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளது. இந்திய எல்லை பாதுகாப்பில் மீண்டும் ஒரு முக்கிய வெற்றி என்பதில் ஐயமில்லை.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!