ஜம்முவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பலி... தமிழக சட்டப்பேரவையில் அஞ்சலி.!

 
சட்டப்பேரவை

 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு காஷ்மீர் மாநிலத்தில் அனந்த்நாக் மாவட்டத்தில்  பஹல்காமின் மேல் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். 3 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

சட்டப்பேரவை

பஹெல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள். கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள். காஷ்மீர் தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடி சவுதி அரேபியா பயணத்தை ரத்து செய்துவிட்டு  நாடு திரும்பியுள்ளார்.  ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் குறித்து வெளியுறவு அமைச்சர், செயலாளர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.  

சட்டப்பேரவை
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நிமிடம் மௌனமாக நின்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?