அமெரிக்காவில் இந்திய பொருட்களுக்கு 26 % வரிவிதிப்பு... மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து ராகுல்காந்தி சராமாரி கேள்வி!

 
மோடி ராகுல்


அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான  இறக்குமதி வரி விதிக்கப்படும் முறையை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.  சுமார் 10%-ல் இருந்து 49% வரையில் அமெரிக்கவுடன் வர்த்தகம் வைத்துள்ள ஒவ்வொரு நாடுகளுக்கும் ஒவ்வொரு விதமாக வரி விதிமுறையை அமல்படுத்தியுள்ளார்.

ராகுல்


இதில் இந்தியாவுக்கு 26 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டு உள்ளது. இந்த இறக்குமதி வரி   ஏப்ரல் 9ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனக்  கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்புமுறை பற்றி பல்வேறு உலக நாடுகளும் தங்கள் அதிருப்தியை பதிவு செய்து வருகின்ற்னர். இது குறித்து பலரும் தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில் பேசிய எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரிகள் பற்றி கூறினார். இந்த வரி விதிமுறையானது இந்திய பொருளாதாரத்தை சீரழிக்கும் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.  

ராகுல் காந்தி
நட்பு நாடான அமெரிக்கா திடீரென இந்திய பொருட்கள் மீது 26 சதவீத பரஸ்பர வரியை விதித்துள்ள முடிவு, நமது பொருளாதாரத்தை முற்றிலும் பாதிக்கும் நடைமுறையாகும். நமது ஆட்டோமொபைல் துறை, மருத்துவத்துறை மற்றும் விவசாயம் என அனைத்தும் இந்த வரி விதிப்பால் பாதிப்பிற்கு உள்ளாகிறது. நட்பு நாடாக இருக்கும் அமெரிக்கா இந்தியா மீது கூடுதல் வரி கட்டணம் விதித்துள்ளது குறித்து  மத்திய அரசு என்ன செய்யப் போகிறீர்கள்? என மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web