அடுத்தடுத்து மோதிக் கொண்ட 26 வாகனங்கள்... 6 பேர் பலியான சோகம்... 25 பேர் கவலைக்கிடம்!

 
26 வாகனங்கள் மோதல்

 தென்மேற்கு ஈரானின் கோகிலுயேவில் இருந்து   போயர் அகமது மாகாணத்திற்கு லாரி ஒன்று  இரும்பு கம்பிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது.  அந்த லாரியில் திடீரென பிரேக் செயலிழந்து விட்டது.  டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த வாகனங்கள் மீது நேருக்கு நேர் மோதியது. இதனையடுத்து ஒன்றன்பின் ஒன்றாக 26 வாகனங்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. வாகனங்களில் பயணம் செய்தவர்கள் மட்டுமல்ல  சாலையில் நடந்து சென்ற பாதசாரிகள் மீதும் இந்த வாகனங்கள் மோதி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து

இது குறித்து  தகவல் தெரிவிக்கப்பட்டதும்  மீட்பு படையினர்  சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர். 25க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன்  மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில்   சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

accident

அதே நேரத்தில் விபத்து நடந்த சாலையில் இருந்து வாகனங்கள் அப்புறப்படுத்தும் வரை தொடர்ந்து பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அதன் பிறகே இயல்பு நிலைக்கு திரும்பியது. 26 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பல உயிரிழப்புக்கள் ஏற்பட்டது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web