2,674 காலியிடங்கள்...சமூக நல அலுவலர் பணி.. டிகிரி முடிச்சிருந்தா போதும்!

 
வேலை வாய்ப்பு முகாம்

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடிச்சிருந்தா போதும்.. மொத்தம் 2674 காலி பணியிடங்கள் இருக்கின்றன. இந்த சமூக நல அலுவலர் பதவிக்கு திறமையும், ஆர்வமும்  உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உடனே விண்ணப்பதை அனுப்புங்க. எப்படி விண்ணப்பிக்கலாம்னு பார்க்கலாம் வாங்க.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில், சமூக நல அலுவலர் பணி மட்டுமல்லாமல், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சுருக்கெழுத்தர் பணிக்கான தேர்வு பற்றிய அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்த சுருக்கெழுத்தர் பணிகளுக்கும் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்:  2674 சமூக நல அலுவலர் பதவி (Social Security Assistant),  185  சுருக்கெழுத்தர் பணி (stenographer-Group C)

கல்வித் தகுதி: சமூக நல அலுவலர் பதவிக்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்; அதேபோன்று, சுருக்கெழுத்தர் பதவிக்கு 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.   

jobs

வயது வரம்பு: 2023, ஏப்ரல் 26 அன்று, விண்ணப்பதாரர் வயது வரம்பு 18- 27க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

தேர்வு முறை: சமூக நல அலுவலர் பதவிக்கு எழுத்துத் தேர்வு (Written test), கணினி திறனறிவு தேர்வில் ( Computer Skill test ) பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். சுருக்கெழுத்தர் பதவிக்கு எழுத்துத் தேர்வு (Written test), சுருக்கெழுத்தர் திறன் தேர்வில் ( Stenography Skill test ) பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.700 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகம்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.04.2023

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.700 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. stenographer (Group C) Notification இங்கே பதிவிறக்கம் செய்து செய்து கொள்ளலாம்.

விண்ணப்பம் செய்வது எப்படி?  recruitment.nta.nic.in என்ற இணையதளத்தில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web