ஆன்லைன் சூதாட்டத்திற்கு 28 சதவிகிதம் வரி !! ஜிஎஸ்டி கவுன்சில் அதிரடி!!

 
ஆன்லைன்


நாடு முழுவதும் ஒரே அளவிலான சரக்கு மற்றும் சேவைவரி (ஜிஎஸ்டி) 2017 ஜூலை முதல் தேதி நடைமுறைக்கு வந்தது. பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 5, 12, 18, 28 சதவிகித ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.
மத்தியநிதி அமைச்சர் தலைமையில் மாநில நிதி அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஜிஎஸ்டி கவுன்சில் அடிக்கடி கூட்டம் நடத்தி, ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மாற்றங்கள், சிக்கல்களுக்கு தீர்வுகள், புதியவிதி முறைகள் குறித்து முடிவு எடுக்கிறது. இந்நிலையில், டில்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 50வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. அதில் மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர். புதிய சட்டத்திருத்தம் இதற்கிடையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடுப்பு சட்டத்தின் கீழ் ஜிஎஸ்டி நெட்ஒர்க் அமைப்பை கொண்டுவந்தது, 

நிர்மலா சீதாராமன்
மத்தியநிதி அமைச்சகம் ஜூலை 8ம் தேதி அரசாணை வெளியிட்டது. இதில், சட்டத்தின் 66வது பிரிவின்கீழ், சட்டவிரோத பணப்பரிமாற்ற தகவல்களை பகிர்ந்து கொள்ளும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராம தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசும் கலந்து கொண்டார்.
இனி பணமோசடி விசாரணையில், அமலாக்கப்பிரிவு கேட்கும் வர்த்தகர்கள் தொடர்பான தகவல்களை ஜிஎஸ்டி நெட்ஒர்க் வழங்க வேண்டும்.மேலும், ஜிஎஸ்டி உள்ளீட்டு வரி மோசடி, போலிபில் தொடர்பான புகார்களை சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தும். இந்த புதிய அரசாணைக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் எதிர்ப்குறித்தும் கூட்டத்தில் விவாதம் நடத்தப்பட்டது.
கூட்டத்தின் முடிவில், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
* ஆன்லைன் விளையாட்டு, குதிரைப்பந்தயம், சூதாட்ட விடுதிகள் மீது 28 சதவிகித ஜிஎஸ்டி விதிக்க கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 

நிர்மலா சீதாராமன்
*புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்து மற்றும் அரிய வகை நோய்களால் பாதிப்புக்கான சிறப்பு மருந்துகள், சிறப்பு உணவுப்பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் வரிவிலக்கு அளிக்கப்படும்.
*தனியார் நிறுவனங்களால் செயற்கைக்கோள் நிலைநிறுத்தும் சேவைக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
*விவசாயிகளிடம் கூட்டுறவு நூற்பாலைகள் பெறும் கச்சா பருத்தி வரிவிதிக்கத்தக்கது என கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், 5 வகை தலைப்புகளில் முந்தைய காலம் ஒழுங்குமுறை செய்யப்படும்.
* மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகள் மற்றும் குளிர்பானங்கள் மீதான ஜிஎஸ்டி 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்படும்.
* சமைக்கப்படாத, வறுக்கப்படாத தின்பண்டங்களுக்கு ஜிஎஸ்டி 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு.
*மீன் கரைப்பு பேஸ்ட் மீது ஜிஎஸ்டி 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு.
* செயற்கை ஜரிகை நூல் மீது ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு.

 


* ஜிஎஸ்டி உயர் தீர்ப்பாய பெஞ்சுகள் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பெஞ்சுகள் தேவை மற்றும் பெஞ்ச் உறுப்பினர்கள் தேர்வு தொடர்பாக மாநில நிதி அமைச்சர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். 50 பெஞ்சுகள் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
* முதலில், மாநில தலைநகரங்களில் ஜிஎஸ்டி தீர்ப்பாய பெஞ்சுகள் அமைக்கப்படும். பின்னர், மற்ற நகரங்களுக்கும் தீர்ப்பாய பெஞ்ச் விரிவாக்கப்படும். இவ்வாறு நிதி அமைச்சர் கூறினார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web