சென்னை உயர்நீதிமன்றத்தில் 28 காலியிடங்கள் அறிவிப்பு... பட்டதாரிகள் உடனே அப்ளை பண்ணுங்க!
சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு வாரியம் சார்பில் நிர்வாக ரீதியிலான பல்வேறு பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது சட்டப் படிப்பை முடித்த இளைஞர்களுக்குப் பயனுள்ள வகையில், 28 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள சட்டப் பட்டதாரிகள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

ஆராய்ச்சி சட்ட உதவியாளர் (Research Law Assistant) பதவிக்காக இந்த நியமனங்கள் நடைபெறுகின்றன. பணிபுரியும் இடம் சென்னை அல்லது மதுரையாக இருக்கலாம். விண்ணப்பதாரர்கள் இந்திய பார் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட சட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். வயது வரம்பைப் பொறுத்தவரை, 15-12-2025 அன்றைய தேதிப்படி 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சட்டப் பட்டதாரிகளுக்குக் கிடைத்த அரிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

தேர்வு முறை, தகுதித் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய இரண்டு நிலைகளில் நடைபெறும். விண்ணப்பிக்கக் கடைசித் தேதி 15-12-2025 என அறிவிக்கப்பட்டு உள்ளது. தகுதியுள்ள நபர்கள் https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதள முகவரியின் மூலம் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற ஆட்சேர்ப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
