சத்தீஸ்கரில் 29 நக்சலைட்டுகள் ஆயுதங்களுடன் சரண்.. சாதித்தாரா அமித்ஷா.. மார்ச்சுக்குள் முற்றுப்புள்ளி!
இந்தியாவின் நக்சலைட் ஆதிக்கமுள்ள பகுதிகளில் ஒன்றான சத்தீஸ்கரில், வன்முறைப் பாதையைத் துறந்து பல நக்சலைட்டுகள் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பி வருகின்றனர். குறிப்பாகச் சுக்மா மாவட்டத்தில் இன்று நடந்த இந்தச் சரணடைவு நிகழ்வு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் மார்ச் 2026க்குள் இந்தியாவில் நக்சலைட் அச்சுறுத்தலை முழுமையாக வேரறுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளார். இதற்காக "மறுவாழ்வுத் திட்டம்" மூலம் சரணடைபவர்களுக்குப் பல்வேறு சலுகைகளை மாநில அரசு வழங்கி வருகிறது.

சரணடைந்த 29 பேரில், தேடப்பட்டு வந்த முக்கிய நக்சலைட்டான போடியம் புத்ரா என்பவரும் அடங்குவார். இவரது தலைக்கு மாநில அரசு ரூ.2 லட்சம் பரிசு அறிவித்திருந்தது. கோகுண்டா பகுதியில் செயல்பட்டு வந்த இவர், பாதுகாப்புப் படையினர் மீதான பல தாக்குதல் சம்பவங்களில் மூளையாகச் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி 7-ஆம் தேதி இதே சுக்மா மாவட்டத்தில் 26 நக்சலைட்டுகள் சரணடைந்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக இப்போது மேலும் 29 பேர் சரணடைந்துள்ளது பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
