இன்று முதல் தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் ரூ.60 வரை கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

 
டோல்கேட்

தமிழகத்தில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் உட்பட சுமார் 29 சுங்கச்சாவடிகளில் நேற்று நள்ளிரவு முதல் ரூ.60 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.  இதனால் வாகனஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை உட்பட இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் அவற்றின் பராமரிப்பு பணிக்காக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்தியாவில் மொத்தம் 800க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் தமிழகம் முழுவதும் உள்ள 29 சுங்கச்சாவடிகளில்  நேற்று நள்ளிரவு 12 மணி முதல்  சுங்கக் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது.  தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சென்னை உத்தண்டி சுங்கச்சாவடி மற்றும் கோவளம் சுங்கச்சாவடியிலும் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

சுங்கச்சாவடி

தமிழகத்தில் மொத்தம்  உள்ள 55 சுங்கச்சாவடிகளில், 29 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு நேற்று நள்ளிரவு  முதல் அமலுக்கு வந்தது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளது. இதனால்  தனியார் பேருந்துகளின் கட்டணமும் உயரக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

சுங்கக்கட்டணம் உயர்வு ரூ.10 முதல் ரூ.60 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, காருக்கு ரூ.60 லிருந்து ரூ.70 ஆகவும், இலகுரக வாகனத்துக்கு ரூ.105 லிருந்து ரூ.115 ஆகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.2025 லிருந்து ரூ.240 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  

சென்னையைப் பொறுத்தவரை, புறநகர்ப் பகுதிகளில் உள்ள பரனூர், வானகரம், செங்குன்றம், பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில், கார்களுக்கு ரூ.60-ல் இருந்து ரூ.70-ஆகவும், இலகுரக வாகனங்களுக்கு ரூ.105-ல் இருந்து ரூ.115, லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.205-ல் இருந்து ரூ.240, மூன்று அச்சு (ஆக்ஸில்) வாகனங்களுக்கு ரூ.225-ல் இருந்து ரூ.260, நான்கு முதல் ஆறு அச்சு வாகனங்களுக்கு ரூ.325-ல் இருந்து ரூ.375, ஏழு அச்சு மற்றும் அதற்கு மேல் உள்ள வாகனங்களுக்கு ரூ.395-ல் இருந்து ரூ.455-ஆக சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு, கார் மற்றும் கனரக வாகனங்களில் பயணம் மேற்கொள்வோருக்கு கூடுதல் செலவு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

சுங்கசாவடி டோல்கேட்
தற்போது அமல்படுத்தப்பட உள்ள இந்த கட்டண உயர்வு அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 55 டோல்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ல் கட்டணம் மாற்றி நிர்ணயம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web