முன்பதிவு செய்துக்கோங்க... 2925 சிறப்பு பேருந்துகள்... ரம்ஜான், வாரவிடுமுறை ஸ்பெஷல்!

தமிழகத்தில் வார இறுதி நாட்களில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த வார விடுமுறை நாட்கள் மற்றும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அதிகமான மக்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்வார்கள் என்பதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 28 (வெள்ளி), 29 (சனி), 30 (ஞாயிறு) மற்றும் 31 (ஞாயிறு – ரம்ஜான் பண்டிகை) ஆகிய தேதிகளில் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம், ஈரோடு, திருப்பூர் நகரங்களுக்கு மார்ச் 28-ஆம் தேதி 460 பேருந்துகள் மற்றும் 29-ஆம் தேதி 530 பேருந்துகள் என மொத்தமாக 990 பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல் மார்ச் 31ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை நாளன்று, பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கும் மற்றும் பிற நகரங்களுக்கும் 890 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு பகுதிகளுக்கு மார்ச் 28ம் தேதி 100 பேருந்துகளும், 29-ம் தேதி 95 பேருந்துகளும் இயக்கப்படும். மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து தலா 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூரிலிருந்தும் பல்வேறு நகரங்களுக்குப் 300 பேருந்துகள் இயக்கப்படும். திங்கட்கிழமை அன்று மக்கள் சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூருவுக்கு திரும்புவதற்கான அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!