திமுக மாணவர் அணிக்கு முதன் முறையாக பெண் செயலாளர்… !
திமுக மாணவர் அணியின் செயலாளராக ஜெ.வீரமணி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அந்த அமைப்பின் வரலாற்றிலேயே செயலாளர் பொறுப்பை ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதுவரை அந்தப் பொறுப்பில் இருந்த இரா.ராஜீவ்காந்தி அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், மாணவர் அணி துணைச் செயலாளராக இருந்த ஜெ.வீரமணி தற்போது மாணவர் அணிச் செயலாளராக பொறுப்பேற்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரா.ராஜீவ்காந்தி அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு கட்சியின் கொள்கை பரப்பு பணிகளில் இணைச் செயலாளராக செயல்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக நாம் தமிழர் கட்சியில் மாநில இளைஞரணி செயலாளராக இருந்த இரா.ராஜீவ்காந்தி, 2021 ஆம் ஆண்டு அந்தக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். பின்னர் 2025 ஆம் ஆண்டு திமுக மாணவர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அந்தப் பொறுப்பில் மாற்றம் செய்யப்பட்டு புதிய பொறுப்பில் அவரை கட்சி நியமித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
