சோகம்... விஷவண்டு கடித்து 2-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே விஷ வண்டு கடித்து 7 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி அருகே உள்ள மாவடி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். கூலித்தொழிலாளியான இவரது மகன் ஜீவானந்தம் (7), அங்குள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.
அதே பகுதியைச் சேர்ந்த பட்டாணித்துரை மகன் 1-ம் வகுப்பு படிக்கும் மாணவன் நித்தின்ராஜ்(6). இந்த 2 சிறுவர்களும் நேற்று முன்தினம் வீட்டின் முன் விளையாடிக் கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு கிடந்த தேங்காயில் இருந்த கடந்தை விஷவண்டு 2 சிறுவர்களையும் கடித்தது. இதனால் 2 பேரும் அலறினார்கள். அவர்களை மீட்டு களக்காட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்தனர். நேற்று அதிகாலையில் ஜீவானந்தம் உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!