டிசம்பர் 12ம் தேதி 2ம் கட்ட மகளிர் உரிமை தொகை... முதல்வர் தொடங்கி வைப்பு!

 
மகளிர் உரிமைத் தொகை
 

சென்னையில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற பெயரில் தமிழக சாதனைப் பெண்களின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சி வரும் 12-ம் தேதி நடைபெறுகிறது. சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில், பிற்பகல் 3 மணிக்கு இந்த விழா நடக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மகளிர் உரிமைத் தொகை

இந்த விழாவில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார். தமிழக அரசின் மகளிர் நலத் திட்டங்களால் பயன் பெற்ற பெண்களின் அனுபவங்களும், பல துறைகளில் சாதித்த பெண்களின் வெற்றிக் கதைகளும் இங்கே பகிரப்படும். சமூகசேவகி கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், இந்திய பூப்பந்து வீராங்கனை துளசிமதி முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

மகளிர் உரிமை தொகை

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், மக்களைத் தேடி மருத்துவம், மகளிர் நிலவுடைமை, சுயஉதவிக் குழுக்கள், பெண் தொழில் முனைவோர், தோழி விடுதிகள் போன்ற திட்டங்களால் பயன் பெற்ற பெண்கள் இந்த விழாவின் மையமாக இருப்பார்கள். கல்வி, மருத்துவம், காவல், விவசாயம், அறிவியல், விளையாட்டு, அரசியல், கலை உள்ளிட்ட துறைகளில் சாதித்த பெண்களும் கலந்து கொள்கிறார்கள். பெண்களின் முன்னேற்றத்தை கொண்டாடும் அரசின் முயற்சியாக இந்த நிகழ்ச்சி அமைய உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!