இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2வது அமர்வு தொடங்குகிறது!

 
நாடாளுமன்றம்  ஒத்திவைப்பு

இன்று பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாவது அமர்வு கூடுகிறது. எந்த பிரச்சனைகளும் இல்லாமல் அமைதியாக இந்த கூட்டத்தொடர் நடைப்பெறுவதற்காக நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. வரும் 2023- 24 ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை 27 அமர்வுகளில் 66 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பிப்ரவரி 14 முதல் மார்ச் 12 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரை  ஆற்றினார்.

 பாராளுமன்றம்

இந்த  உரையுடன், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து  பிப்ரவரி 1 ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  அதன் பிறகு நாடாளுமன்ற கூட்டத் தொடரின் முதல் அமர்வு பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 10 அமர்வுகள் நடைபெற்றன. முதல் அமர்வில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானமும் மத்திய பட்ஜெட் மீதான விவாதங்களும்  நடைபெற்றது.

 பாராளுமன்றம்

ஒரு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் கூட உள்ள நிலையில்  இந்த காலகட்டத்தில் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மானியங்களுக்கான கோரிக்கைகளை துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் ஆய்வு செய்யப்பட்டன. நாளை தொடங்க இருக்கும் 2 வது அமர்வில் மொத்தம் 17 அமர்வுகள் உள்ளன. இந்த கூட்டத் தொடர் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும். இந்த அமர்வை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்யும் வகையில் நேற்று அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது . இந்தக் கூட்டம் மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் தலைமையில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web