2வது டி20 போட்டி... நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி... தொடரில் முன்னிலை!
ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி, டி20 தொடரில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. 209 ரன்கள் என்ற இமாலய இலக்கை மிக எளிதாக எட்டிப்பிடித்து இந்திய அணி சாதனை படைத்துள்ளது.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, இந்தியப் பந்துவீச்சைச் சிதறடித்தது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. அந்த அணியின் சாண்ட்னர் 47 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 44 ரன்களும் எடுத்து வலுவான ஸ்கோரை எட்ட உதவினர்.

209 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்தியாவுக்குத் தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. சஞ்சு சாம்சன் (6), அபிஷேக் சர்மா (0) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடக்க வீரராகக் களமிறங்கிய இஷான் கிஷன், நியூசிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் வெறும் 32 பந்துகளில் 76 ரன்கள் விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றினார்.

இஷானுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், தனது பாணியில் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அவர் 37 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் ஷிவம் துபே 18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார். இந்தியா 15.2 ஓவர்களிலேயே 209 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
