சென்னையில் பைக் திருடிச் சென்று திருவண்ணாமலையில் விற்பனை: 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பிடிபட்டனர்!

 
பைக்

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரின் பைக் திருடு போன வழக்கை விசாரித்த போது, இந்தத் திருட்டு கும்பலின் பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சென்னை கொளத்தூர், அஞ்சுகம் நகர் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ஜெயபாரதி (34). கடந்த பிப்ரவரி 6-ம் தேதி இரவு தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருடு போனது குறித்து கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பைக்

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்த ஜெகதீஷ் (19) என்பவர் இரண்டு சிறுவர்களுடன் சேர்ந்து பைக்கை திருடியது உறுதி செய்யப்பட்டது. கடந்த 18-ம் தேதி முக்கிய நபரான ஜெகதீஷை கைது செய்த போலீசார், நேற்று முன்தினம் அவரது கூட்டாளிகளான 18 வயதிற்குட்பட்ட இரண்டு சிறுவர்களையும் கைது செய்தனர்.

பைக் திருட்டு

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 6 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், இவர்கள் சென்னையில் மட்டும் இன்றி பல்வேறு ஊர்களிலும் பைக்குகளைத் திருடி, அவற்றைத் திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. கைதான ஜெகதீஷ் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்; சிறுவர்கள் இருவரும் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

தற்போது வாகனத் திருட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் தங்கள் வாகனங்களை உரிய பாதுகாப்புடன் நிறுத்துமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!