பள்ளி மாணவனை கடத்தி சென்ற 3 சிறுவர்கள் - தூத்துக்குடியில் அதிர்ச்சி!

 
கடத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில், தந்தையிடம் இருந்த முன்விரோதம் காரணமாக 11-ஆம் வகுப்பு மாணவனை மூன்று சிறுவர்கள் பட்டப்பகலில் பைக்கில் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்திருப்பேரை அருகே உள்ள குரங்கணி கிராமத்தைச் சேர்ந்த தங்கசாமி என்பவரது மகன் அபினேஷ் (16), மாவடிப்பண்ணையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி முடிந்து அபினேஷ் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, அங்கு பைக்கில் வந்த மூன்று சிறுவர்கள் அவரை வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்திச் சென்றனர்.

தூத்துக்குடி

கடத்தப்பட்ட மாணவனின் அண்ணன் முத்துநாராயணனை செல்போனில் அழைத்த அந்தச் சிறுவர்கள், "உன் தம்பியை நாங்கள் கடத்திச் செல்கிறோம்" என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துள்ளனர். இதனால் பதற்றமடைந்த தங்கசாமி, உடனடியாக ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், கடத்தல்காரர்களின் செல்போன் சிக்னல் மற்றும் அவர்கள் சென்ற பாதையைத் தீவிரமாகப் பின்தொடர்ந்தனர். போலீசாரின் துரத்தலை அறிந்த சிறுவர்கள், கூட்டாம்புளி மெயின் ரோட்டில் மாணவன் அபினேஷை இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

கைது

போலீசார் நடத்திய அதிரடித் தேடுதல் வேட்டையில், கடத்தலில் ஈடுபட்ட மூன்று சிறுவர்களும் பிடிபட்டனர். விசாரணையில், மாணவனின் தந்தையான தங்கசாமிக்கும் இவர்களுக்கும் இடையே ஏற்கனவே சில பிரச்சனைகள் இருந்ததும், அந்த முன்விரோதத்தின் காரணமாகவே அவரது மகனைக் கடத்தி மிரட்ட முயன்றதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மூன்று சிறுவர்களும் தூத்துக்குடி குழந்தைகள் நல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் வேறு யாரேனும் தூண்டுதலாக இருந்தார்களா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!