அதிர்ச்சி... இளைஞரை கொலை செய்து எரித்த 3 சிறுவர்கள்...!

 
துப்பாக்கி ரத்தம் க்ரைம் தற்கொலை கொலை


இந்தியாவில் வடமாநிலங்களில் குற்றவியல் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.  தென்கிழக்கு டெல்லி பகுதியில் பாதி எரிந்த நிலையில் இளைஞர்   உடல் நேற்று கிடந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த   விசாரணையில் பாதி எரிந்தவரின் உடல்  ஆசாத் அகமது. இவருக்கு வயது 25 என்பதும்,   அவர் கொலை செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதும்  தெரிய வந்தது.

க்ரைம்

இது குறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் 16 வயது சிறுவன் குற்றவாளியாக பிடித்து கைது செய்தது. அவன் இந்த கொலை சம்பவமாக பல திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக அளித்துள்ளான்.  கைது செய்யப்பட்ட சிறுவனை, ஆசாத் அகமது பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்தார்.  இதுகுறித்து தனது நண்பர்களிடம் சிறுவன் வேதனையுடன் கூறினார்.  ஆசாத்தை கொலை செய்வதை தவிர அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை. இதனையடுத்து 3 சிறுவர்களும் அவரை கொலை செய்து விடும் முடிவுக்கு வந்தனர்.  

டெல்லி போலீஸ்

ஆசாத்தை  ஆள் அரவமற்ற இடத்திற்கு  வரவழைத்து 16 வயது சிறுவன் வெட்டிக்கொலை செய்தார். அவரது உடலை தனது நண்பர்களுடன் சேர்ந்து தீ வைத்து எரித்தனர்.  அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 2  நண்பர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  இந்த சிறுவர்கள் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் பறிமுதல் செய்யப்பட்டது.  தன்னை  பாலியல் வன்கொடுமை செய்தவரை நண்பர்களுடன் சேர்ந்து  16 வயது சிறுவன்  கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!