பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 குழந்தைகள் உயிரிழந்த வழக்கு... கேட் கீப்பருக்கு குரல் பதிவு செய்ய உத்தரவு!
கடலூர் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் செம்மங்குப்பம் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. ரயில்வே கேட் மூடப்படாத நிலையில் பள்ளி வேன் டிரைவர் கடக்க முயன்றபோது சிதம்பரம் நோக்கி சென்ற ரயில் வாகனம் மீது மோதியது. இதில் 3 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு சிதம்பரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கில் முக்கிய ஆதாரமாக கேட் கீப்பர் பங்கஜ் குமார் ரயில் நிலைய மேலாளருடன் பேசியதாக கூறப்படும் ஆடியோ பதிவு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதிவில் கேட்டை மூட மறந்துவிட்டதாக அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தன்னிடம் குரல் பதிவு செய்யக்கூடாது என பங்கஜ் குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதை நிராகரித்த நீதிமன்றம் வரும் 27ம் தேதி குரல் பரிசோதனை நடத்த உத்தரவிட்டுள்ளது. மேலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியாததால் வழக்கு ஆவணங்களை இந்தியில் மொழிபெயர்த்து வழங்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
