தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்களுக்கு விடுமுறை... மதுபானப் பிரியர்கள் அதிர்ச்சி... !

 
மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள்!! தடுமாறும் குடிமகன்கள் !!

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே  உள்ளன. பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் மக்கள் தயாராகி வருகின்றனர்.  தமிழகம் முழுவதும்  ஜனவரி மாதத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் 3  நாட்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கீழ் டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகிறது. காந்தி ஜெயந்தி உட்பட குறிப்பிட்ட  நாட்களில் தமிழகத்தில் டாஸ்டாக் கடை மூடப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.  

டாஸ்மாக்

அந்த வகையில் ஜனவரி மாதத்தில்  3  நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  அதாவது பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாளான  ஜனவரி 16ம் தேதி (திருவள்ளுவர் தினம்), ஜனவரி 25ம் தேதி (வள்ளலார் நினைவு தினம்), ஜனவரி 26ம் தேதி (குடியரசு தினம்) டாஸ்மாக் கடைகளுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மதுக் கடைகள் மற்றும் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  

டாஸ்மாக்
அதன்படி தமிழகத்தின் மாவட்டங்களில் இருக்கும் ஆட்சியர்கள்   உத்தரவை பிறப்பித்து அந்தந்த மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில், விடுமுறை நாட்களில் மதுபானக் கடைகளை திறந்து வைக்கப்பட்டால்  சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், மற்றும் எப்.எல்-2 மற்றும் எப்.எல்3 உரிமைத்தாரர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web